ஐயமும் தீர்வும்

BMPA 1995ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து நாட்டின் முக்கியமான உற்பத்தியாளர்களை ஒன்றிணைத்து கடலோர கனிமத்துறை அதன் முழு வளர்ச்சியும் அடைய இடையறாது உழைத்து வருகிறது.
BMPA சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, இந்திய தர நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றிருக்கும் சங்கமாகும். கடலோர கனிம வளத்துறைக்கு நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கத்தோடு இச்சங்கம் இயங்குகிறது. வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கான பங்களிப்பு மற்றும் உள்ளூர் மக்களுக்கான மேம்பாடு என பல வகைகளில் கனிமவளத் தொழிற்துறை முன்னேற BMPA உதவுகிறது.
ஏனைய சுரங்க அகழாய்வை காட்டிலும், கடற்கரை கனிமங்கள் சுற்றுசூழலுக்கு உகந்த வகையிலேயே அகழாய்வு செய்யப்படுகிறது. தோற்றத்தையும் தன்மையையும் பொறுத்து மீட்கக்கூடியவை (replenishable) மீட்க முடியாதவை (non replenishable) என கனிமங்கள் இருவகையாக பிரிக்கப்படுகின்றன. கடலோர கனிமங்கள் மீட்கக்கூடிய வகையை சேரும். மட்டுமல்லாமல் கடலோர கனிமத்தை எடுக்கும் முறை மிக எளிமையான, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத முறை ஆகும். அகழ்வெடுத்தல் முழுக்க முழுக்க மனித உழைப்பை சார்ந்ததுதான். மண்வெட்டி, மண்ணள்ள கூடைகள் போன்ற எளிய பொருட்களையும் உபகரணங்களையும் கொண்டுதான் அகழ்வு பணி நடக்கும். நீர், நிலம் அல்லது இரைச்சல் என எந்தவிதமான மாசு ஏற்படுவதில்லை. கனிமங்கள் பிரித்தெடுக்கும் முறைகளும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாகவே மேற்கொள்ளப்படுகிறது. கூடுதலான ஆற்றலையோ அல்லது ரசாயனங்களையோ பயன்படுத்தாமல், சூரிய வெப்ப ஆற்றலை கொண்டே கனிமங்கள் உலரவைக்கப்படுகின்றன. ((உண்மையில் இது கனிம அகழாய்வு அல்ல. ஆனால் இயற்க்கையாக கடற்கரையோரம் படியும் மீட்கக்கூடிய வகையை சார்ந்த கனிமங்களை சேகரிப்பதாகும்)). சுரங்க அகழாய்வு .
இல்லை. விவசாய நடவடிக்கைகளை விட இது எளிதானது.அகழ்வெடுத்தல் முழுக்கமுழுக்க மனித உழைப்பை சார்ந்ததுதான். மண்வெட்டி, மண்ணள்ளகூடைகள் போன்ற எளிய பொருட்களையும் உபகரணங்களையும் கொண்டுதான் அகழ்வு பணி நடக்கும். கனரக இயந்திரங்கள், வெடி பொருட்கள், துளையிடுதல் அல்லது இரசாயன வகைகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. கனிமங்கள் பிரிக்கப்பட்டப்பின் மீதமுள்ள மிச்ச சிலிக்கா அகழ்வேடுக்கப்பட்ட இடத்திற்கே கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்படுகிறது. இதனை உறுதிபடுத்தும் வகையில், குத்தகைதாரர்களிடம் இருந்து, இந்திய அரசால் வங்கி உத்தரவாத பிணைத்தொகை பெறப்படுகிறது. இதனை மீறும் போது குத்தகைதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட வங்கி உத்தரவாத பிணைத்தொகையை கொண்டு இப்பணிகளை சுரங்கங்களுக்கான ஆணையமே மேற்கொள்ளும். இன்றுவரையில், கனிமங்கள் அகழ்வெடுக்கும் கடற்கரை பகுதிகளில் கடலரிப்பு எதுவும் நிகழவில்லை. மாறாக வளர்ச்சியே ஏற்பட்டுள்ளது.
சேகரிப்பு மற்றும் செயலாக்கம் என அனைத்து நிலைகளிலும் கடற்கரை கனிமங்கள் மிகவும் பாதுகாப்பானவை. இந்த கடற்கரை கனிமங்களில் மோனசைட்டின் தடயங்கள் உள்ளன. மோனசைட் கனிமம் மிகவும் குறைவான அளவு யுரேனியம் மற்றும் தோரியம் ஆகியவற்றை கொண்டுள்ளது. அனைத்து கடற்கரை தாதுகளும் பாதுகாப்பானவை மற்றும் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத பயன்பாடு கொண்டவை. கடற்கரை கனிம அகழாய்வு தொடக்க காலம் முதல், எந்தவொரு ஊழியரும் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களும் எந்த வகையான அகழாய்வு அல்லது கதிர்வீச்சு தொடர்பான நோய்களால் பாதிக்கப்படவில்லை.
ஆற்றுமணல் அகழ்வும் கடலோர மணல் அகழ்வும் முற்றிலும் வெவ்வேறானவை. இயற்கை சீர்குலைக்கப்படுவது உண்மையில் ஆற்றுமணல் அகழ்வில்தான். ஆற்றுமணல் அகழ்வு மண் அரிப்பை ஏற்படுத்தி ஆற்றுப்படுகைக்கு பாதகம் ஏற்படுத்துவதோடு, நிலத்தடி நீர் அளவு குறைவதும், ஆற்றங்கரைகள் அரிக்கப்படுவதும் நிகழ்கின்றன . கடலோர கனிம அகழாய்வு அவ்வாறான பாதிப்பு எதையும் ஏற்படுத்துவதில்லை. அகழ்ந்தெடுக்கப்பட்ட படிமங்களிலிருந்து கனிமங்கள் பிரித்தெடுக்கப்பட்ட மீதமுள்ள சிலிக்கா பின்னர் மீண்டும் அதே இடத்தில நிரப்பப்படுவதால், இயற்கை சமநிலைபாதிக்கப்படுவதில்லை. ஆற்றுமணல் அவ்வாறு மறுசுழற்ச்சிக்கு இல்லாமல் கட்டுமானப்பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.கடலோர கனிம அகழ்வில், படிமங்களின் மேற்பகுதி மட்டுமே எடுக்கப்படும். ஏனெனில் கடல் அலைகள் கொண்டு வந்து சேர்க்கும் கனிமங்கள் மணற்பரப்பின் மேற்பகுதியில்தான் படிமங்களாக படிகிறது. ஆற்றில் மணல் எடுப்பதற்கு அனுமதி பெறுவது சுலபம். கடலோர கனிமங்கள் எடுக்கும் உரிமம் பெற, 28 இலாகாக்களின் அனுமதிக்கும் ஆய்வுக்கும் விண்ணப்பித்து, சுமாராக 2856 நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆற்றுமணல் அகழ்வில் பொதுப்பணி துறை மற்றும் மாநில புவியியல் மற்றும் சுரங்க துறை மட்டுமே மேற்பார்வை செய்யப்படுகிறது. மத்திய அரசின் ஒன்பது துறைகளும் மாநில அரசின் ஏழு துறைகளும் அனுமதி அளிக்க வேண்டும்.
கடலோர கனிம அகழ்வுப்பணிக்கான உரிமம் பெற மத்திய மாநில அரசுகளின் பல துறைகளில் விண்ணப்பம் அளித்து அனுமதி பெற வேண்டியுள்ளது. மத்திய அரசு விண்ணப்பத்தை ஏற்ற பின்னர், சுற்றுச்சூழல் அனுமதி பெறுதல், பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக்கூட்டம் நடத்தி அவர்களின் கருத்தை அறிதல் மற்றும் மத்திய அரசின் பல துறைகளில் உரிமம் பெற வேண்டியுள்ளது. அகழ்வுப்பணிக்கான உரிமம் பெறுவதற்கான முழு விவரம் “கனிமங்கள் (அணு மற்றும் ஹைட்ரோகார்பன் எரிசக்தி கனிமங்களை தவிர) அனுசரணை விதிகள் 2016” மற்றும் அணுசக்தி கனிமங்கள் அனுசரணை விதிகள் 2016” ஆகிய விதிகளில் உள்ளன.
கடலோர கனிமங்களில் மிக குறைவான அளவில் மோனசைட்டின் தடயங்கள் உள்ளன. அவை இயற்கையாக நிகழும் கதிரியக்க பொருட்களை சேரும். அனுசக்தி துறையை தவிற வேறு எந்த தனியார் நிறுவனத்தாலும் மோனசைட் செயலாக்கம் செய்ய இயலாது. எனவே கடலோர கனிம அகழாய்வு, பிரித்தல் என எவ்விடத்திலும் கதிரியக்கம் தொடர்பான கேள்விகளுக்கு இடமில்லை. அதனால் தான் இத் துறையை சார்ந்த பணியாளர்களோ அவர்தம் குடும்பங்களோ எவ்வொரு கதிரியக்கம் சார்ந்த நோயால் பாதிக்கப்படவில்லை.
எந்தவொரு தனியாராலும் மோனசைட்டை அகழாய்வு செய்ய இயலாது. சாதாரண மணல், பாறை மற்றும் பிற கட்டிடத் தயாரிப்புகளில் கூட மோனசைட் கிடைக்கின்றது. அதுபோலவே, கடற்கரை படிமங்களோடு சேர்ந்து மோனசைட் தடயங்கள் உள்ளன. அணுசக்தி ஒழுங்குமுறை வாரிய விதிகளின்படி, இந்த மோனசைட் 5%-க்கும் குறைவாக இருந்தால் திரும்ப சிலிக்கா மணலுடன் கலந்து அகழ்வெடுக்கப்பட்ட இடத்தில் நிரப்பிவிடப்படும். ஒருவேளை 5% மேல் இருந்தால், ஆழமான குழிகளில் இடப்பட்டு கதிரியக்கத்தை குறைக்க அவற்றின் மேல் சிலிக்கா மணலை நிரப்ப வேண்டும். மோனசைட், கனிமம் பிரித்தல் பிரிவில் பிரிக்கப்படும். அவ்வாறு பிரிக்கப்பட்ட மோனசைட் 5 % க்கும் மேல் இருந்தால் அணுசக்தி துறையின் விதிப்படி அவர்களின் மேர்பார்வைக்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் சேமிக்கப்படும். அவர்கள் மோனசைட் அளவு மற்றும் கதிர்வீச்சு போன்றவற்றைப் பார்வையிட்டு அவர்கள் உறுதிப்படுத்துவார்கள்.

ஒவ்வொரு கனிமங்கள் பிரித்தெடுக்கும் பிரிவும் ஓர் கதிரியக்க பாதுகாப்பு அதிகாரியை (RSO) கொண்டிருக்கும். மத்திய அரசு விதித்த விதிகளும் நிபந்தனைகளும் அவர்களால் அமல்படுத்தப்படும். அனைத்து துறைமுகங்களிலும் கதிரியக்கம் சார்ந்த பொருள் ஏதேனும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்றுமதியோ / இறக்குமதியோ செய்யப்படுகின்றதா அல்லது மற்ற பொருள்களோடு கலந்துள்ளதா என்பதை கண்காணிக்கும் சாதனம் (Scanner) பொருத்தப்பட்டுள்ளது. ஏதேனும் அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நபரின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள்ளே கதிரியக்க பொருட்களின் இறக்குமதியை வரையறுத்துள்ளது. எனவே கதிரியக்க பொருள் ஏற்றுமதி செய்ய முடியாது. கதிரியக்க அளவைக் கண்டறியும் அனைத்து குத்தகைதாரர்களும்,  டிஜிட்டல் முறையில் கதிரியக்க அளவைக்  கண்காணித்து,  அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் மோனசைட் கதிரியக்கம்  இருந்தால், தானியங்கி முறையில்  எச்சரிக்கை மணி ஒலிக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.