• Language switcher

    தமிழ் TA English EN
  • info@beachmineral.com

Skip to content
Beach Minerals

  • எங்களை பற்றி
  • கடலோர கனிம அகழாய்வு
  • துறை பங்களிப்பு
  • தரவுகள்
    • Act/Rule/Notifications
    • Complaints related
    • Judgements
    • News Release
    • Parliament questions
    • Radiation
    • Reference Judgement
    • Reports by Govt. authorities
    • Representation by Members
    • Representation to Govt., authorities
    • Representation to Medias
    • RTI Replies
  • ஐயமும் தீர்வும்
  • Video
  • எங்களுடன் இணைய

துறை பங்களிப்பு

சுற்றுச்சூழல் பராமரிப்பு சமூகம் பொருளாதார வளர்ச்சி

கனிமங்கள் பிரித்தெடுக்கபட்ட பின்னர் மீதமுள்ள மணல் (Tailing), அகழ்வெடுக்கப்பட்ட இடத்தில் திரும்ப நிரப்பப்பட்டு, முன்னிருந்த நிலைக்கு சீரமைக்கப்பட வேண்டும் என BMPA அதன் உறுப்பினர்களை வலியுறுத்துகிறது.

பிரித்தெடுக்கப்பட்ட கனிமத்திரட்டு இயற்கையாக கிடைக்கும் சூரிய வெப்பத்தை கொண்டு உலர வைக்கப்படுவதால், கனிமத்திரட்டின் ஒவ்வொரு டன்னுக்கும் 133 கிலோகிராம் கரியமில வாயு (Carbon di-oxide) உற்பத்தியாவதை தடுக்க முடிகிறது - அதாவது ஒரு வருடத்தில் ஒரு லட்சம் டன்!

எவ்வித ரசாயனமும் பயன்படுத்தப்படாததால் நச்சு பொருட்கள் உற்பத்தியாவதில்லை. கனிமங்களை பிரித்தெடுக்க கடல் நீர் பயன்படுத்துவதால் 1600 லிட்டர் நன்னீர் சேமிக்கப்படுகிறது. அதாவது ஒரு வருடத்துக்கு 12 லட்சம் கிலோ லிட்டர் அளவு!

BMPA உறுப்பினர்களின் நிறுவனங்கள் உள்ளூர் மக்களின் ஓர் அங்கமாகவே செயல்படுகின்றன. உற்பத்தியின் ஒவ்வொரு நிலையிலும் உள்ளூர் மற்றும் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களை பங்குபெற வைக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. வேலைவாய்ப்பு, வசதிகள், உதவிகள், புது முயற்சிகள், துறை சார்ந்த திறன் வளர்க்க உதவும் பயிற்சிகள் ஆகியவற்றை வழங்கி, BMPA உள்ளூர் மக்கள் தற்சார்புடனும் வெற்றிகரமாகவும் வளர்ச்சியுடனும் இயங்குவதை உறுதிபடுத்துகிறது.

உள்ளூர் வேலைவாய்ப்பு

உள்ளூர் மக்களின் திறன் மேம்பாடு

மக்கள் நல்வாழ்வு

கல்வி

மகளிர் மேம்பாடு

சமூக நலனுக்கான முன்னெடுப்புகள்

கனிமவளமானது உள்கட்டமைப்பு, மூலதன பொருட்கள் மற்றும் அடிப்படைத் தொழில்களுக்கான முக்கிய மூலப்பொருளாக இருக்கும் ஒரு மதிப்புமிக்க இயற்கை வளமாகும். நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்செல்வதில் கனிமவளத் தொழிற்துறை முதன்மையானது. இத்துறையானது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்துக்கு பங்களிப்பது மட்டுமல்லாது, இதர துறைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வினையூக்கியாக செயல்பட்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாததாகிறது. கனிமவளத் தொழிற்துறையில் ஏற்படும் ஒவ்வொரு சதவிகித வளர்ச்சிக்கும், தொழிற்துறை உற்பத்தியில் 1.2% முதல் 1.4% வளர்ச்சி ஏற்பட்டு, அதன் மூலம் இந்தியத் திருநாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் தோராயமாக 0.3 % உயர வாய்ப்புள்ளது.

கனிம வளத்தை சரியாக பயன்படுத்துவது,நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை. எல்லா தொழில்களும் உலகத்தரத்தில் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு முக்கியத் தேவையாக கனிம வளம் இருக்கிறது. இந்திய தொழிற்துறை சீராக வளர வேண்டுமெனில், கனிம பயன்பாடு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

சரியான திட்டங்கள், நாட்டின் கனிம வளத்தை எல்லா தொழில்களுக்கும் கிடைக்க செய்யும். உபரியான கனிமத்தை ஏற்றுமதி செய்யும் லாபகர வாய்ப்புகளையும் உருவாக்கும்.

கனிம விலையிடல்

வேலைவாய்ப்பு

வணிக வாய்ப்புகள்

India has almost 35 per cent of the world’s total ilmenite deposits and 71 per cent of the world’s total monazite deposits, second only to China. The Indian beach sand minerals industry is estimated to potentially be worth Rs 90,000 crore in annual turnover, and Rs 50,000 crore worth of foreign exchange.

Prior to the liberalization of beach sand mining in 1998, the production to reserve ratio (PRR) in India was less than 0.001%. Since then, the production to reserve ratio has grown to 0.0018% - an 80% increase. Australia and Canada have a PRR of around 0.01%, a ratio that India can easily match, if the government’s policies to this sector are favourable.

India has vast natural resources, technical know-how and skilled manpower; all of which can ensure a thriving and robust beach minerals industry. These minerals are utilised in virtually every sector and every walk of life, and the world today would not function without them. The industry can only grow to new heights from here, and BMPA is determined to ensure that happens.

உள்ளூர் வேலைவாய்ப்பு

கனிம செயலாக்கம் மூன்று பகுதிகளை கொண்டது:

  • கனிமத்திரட்டு அகழ்வெடுக்கப்பட்டு ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுதல்
  • கனிமங்களை பிரித்தெடுத்தல்
  • விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்

உள்ளூர் மக்களை மட்டுமே அகழ்வெடுக்கவும், போக்குவரத்துக்கும் பயன்படுத்த வேண்டும் என BMPA வின் உறுப்பினர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இதனால் சுமார் 50000 பேர் நேரடியாகவும், 300000 பேர் மறைமுகமாகவும் பயனடைகின்றனர். தனித்திறன் அடிப்படையில் தகுதி இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, இன்னும் அதிக தனித்துவம் வாய்ந்த வேலை அளிக்கப்படுகிறது.

உள்ளூர் மக்களின் திறன் மேம்பாடு

அகழ்வெடுக்கும் பகுதிகளுக்கு அருகே BMPA வின் உறுப்பினர்கள் பொறியியல் கல்லூரிகள் நடத்துகின்றனர். உள்ளூர் மக்களுக்கு கல்லூரி மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வறுமையில் வாழும் பெண் குழந்தைகள் படிப்பதற்காக உதவித்தொகையும் வழங்குகிறார்கள். குக்கிராமங்களில் உயர்தர கல்வி கிடைக்கும் வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அகழாய்வு வேலைகளிலும் புவியியல் சம்பந்தப்பட்ட வேலைகளிலும் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு உறுப்பினர்களின் ஆலைகளில் நேரடி பயிற்சியும் வழங்கப்படுகிறது. டைட்டானியம் தனிமங்களின் உற்பத்தியில் இந்தியா முன்னணி வகிப்பதால், உள்ளூர் மக்களுக்கு உபகரணங்கள் பயன்படுத்தும் வாய்ப்புகளும் பயிற்சியும் வழங்கப்படுகின்றன.

மக்கள் நல்வாழ்வு

பணியாளர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோரின் நல்வாழ்வினை உறுதி செய்யவேண்டியது BMPA உறுப்பினர்களின் பொறுப்பாக பணிக்கப்பட்டுள்ளது. சிறியளவிலான உடல்நிலை குறைபாடு முதல் பெரியளவிலான நோய்கள் வரை, ஊழியர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. அவசரகால சிகிச்சைகள் பணமில்லாமல் அளிக்கப்பட்டு மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு ஏற்படும் செலவுகள் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

வருடத்திற்கு இரண்டு இலவச மருத்துவ முகாம்கள் BMPA வின் உறுப்பினர்களால் கடலோரப்பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. கடற்கரை கிராமங்களைச் சுற்றியுள்ள அனைத்து வீடுகளுக்கும் இலவச கழிப்பறை வசதியும் குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

உள்ளூர் மக்களுக்கு இலவச சிகிச்சையை வழங்கும் பொருட்டு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முழுநேரமும் பணியாற்றும் வகையில் 24 மணிநேர இலவச சுகாதார மையம் இயங்குகிறது.

கல்வி

உள்ளூர் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், பள்ளிச்சீருடைகள், பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி என உள்கட்டமைப்புக்கு தேவையான இதர உதவிகளையும், கடலோரப்பகுதிகளை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் BMPA வின் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களின் கல்விச் செலவு முழுவதையும் BMPA உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களின் மொழித் திறன்களை வளர்த்துக் கொள்ள மொழி ஆய்வகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை பெறும் பொருட்டு மாணவர்களின் மொழி ஆற்றலும், நேர்காணலை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது.

மகளிர் மேம்பாடு

கடலோர கனிம வளத்தொழிற்துறையில் பணிபுரியும் வகையில் மகளிருக்கான தொழில் முனைவோர் திட்டங்களை BMPA அளிக்கிறது. துறை சம்பந்தப்பட்ட இதர சங்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்தவும், கடலோர பகுதிகளில் வாழும் பெண்களின் முன்னேற்றத்தையும் இத்திட்டம் நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. 2000 க்கும் மேற்பட்ட கடலோர கிராமிய பெண்கள் தனி சுயஉதவி குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். மேலும் இக்குழுக்களின் மேம்பாட்டிற்காக கோடிக் கணக்கான ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

சமுக நலனுக்கான முன்னெடுப்புகள்

உள்ளூர் மக்களின் அங்கமாக நம் உறுப்பினர்கள் செயல்படுகிறார்கள். கல்வி நிலையங்களுக்கும் மகளிர் மேம்பாட்டுக்கும் உதவுவதோடன்றி, சாலை வசதி மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். நோய்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்கள், ரத்த தான முகாம்கள், விளையாட்டு போட்டிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடத்த உதவுகின்றனர்.

கனிம விலையிடல்

கடற்கரை மணல் கனிமங்களின் குறியீட்டு விலை வரம்பு

கனிம FOB/MT
கார்னெட் $ 100 – 200
இல்மனைட் $ 150 – 300
சிர்கான் $ 700 – 800
ருட்டைல் $ 700 – 900
சில்மனைட் ₹ 6000 – 8000

உற்பத்திப் பொருட்களின் தரம், விவர வரையறை மற்றும் வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்தும், பேக்கிங் செய்யும் முறையை பொறுத்தும் விலைகள் மாறுதலுக்கு உட்பட்டவை. தேவை மற்றும் உற்பத்தியை பொறுத்து சந்தை விலை மாறுபடும்.

வேலைவாய்ப்பு

சர்வதேச உற்பத்திக்கும் இருப்புக்குமான விகிதம் 0.01% என்ற நிலையை அடைந்தால் கடலோர கனிமவளத் தொழிற்துறை,120000 கோடி ரூபாய் மூலதனத்துக்கான வேலைவாய்ப்பை உருவாக்கவல்லது. கனிமங்கள் கிடைக்கும் பகுதிகளுக்கு அருகே இருக்கும் கிராமங்களில் மட்டும் பல லட்ச மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.

கடலோரப் பகுதிகளை சார்ந்துதான் இத்துறை இயங்குகிறது. நிலையான வருமானம் இல்லாத கடலோரத்தில் வாழும் மக்கள் இத்துறையைத்தான் நம்பி இருக்கின்றனர். நாட்டின் வளர்ச்சி முழுமையானதாக இருக்க வேண்டுமெனில் இத்துறை இன்னும் அதிக வேலைவாய்ப்பு கொடுக்கக்கூடிய துறையாக வளர்க்கப்பட வேண்டும். சமூகத்தின் எல்லா நிலைகளில் இருப்பவர்களும் வேலைவாய்ப்பு பெறுகையில்தான் இந்தியா வல்லரசாக முடியும்.

வணிகவாய்ப்புகள்

உலகின் மொத்த கனிம இருப்புகளில் 35 % இல்மனைட்டும் 71% மோனசைட்டும் இந்தியாவில் இருக்கிறது. கடலோர கனிமவளத் தொழிற்துறையின் ஆண்டு விற்றுமுதல் 90000 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டிருகிறது. மேலும் 50000 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி ஈட்டமுடியும். கடலோர கனிமவளத் தொழிற்துறை 1998ம் ஆண்டு தாராளமயமாக்கப்படுவதற்கு முன், உற்பத்திக்கும் இருப்புக்குமான விகிதம் (production to reserve ratio (PRR)) இந்தியாவில் 0.001% ஆக இருந்தது. பின்னர், அது 80% உயர்ந்து 0.0018% ஆகியுள்ளது. அரசின் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுமாயின் ஆஸ்திரேலியாவிலும் கனடாவிலும் உள்ள உற்பத்திக்கும்இருப்புக்குமான விகிதம் (production to reserve ratio (PRR)) 0.01% இந்தியாவும் எளிதில் அடைந்துவிடமுடியும்.பல்வகை இயற்கை வளமும், தொழில்நுட்பச்செறிவும், திறன்வாய்ந்த மனிதவளத்தையும் கொண்ட நாடு இந்தியா. இவையனைத்தும் கனிமவளத் தொழிற்துறையின் நிலையான வளர்ச்சியை உறுதிபடுத்தக்கூடியவை. இக்கனிமங்கள் எல்லா துறைகளிலும் அனைவரின் வாழ்விலும் பயன்படுத்தப்படுபவை. இன்னும் சொல்லப்போனால், இக்கனிமங்கள் இல்லாமல் உலகம் இயங்குவது கடினம். இத்துறை இன்னும் பல உச்சங்களை தொட்டு வளர வேண்டும் என்பதில் BMPA முனைப்புடன் செயல்படுகிறது.

Theme: Twenty Sixteen.
NEWSLETTER SUBSCRIPTION





    1. கடலோர கனிம உற்பத்தியாளர்கள் சங்கம் 1995ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மொத்த உற்பத்தியாளர்களை ஒருங்கிணைக்கவும், துறையில் நிலையான...

    மேலும் படிக்க

    வலைதள படம்

    • எங்களை பற்றி
    • கடலோர கனிம அகழாய்வு
    • துறை பங்களிப்பு
    • தரவுகள்
    • ஐயமும் தீர்வும்
    • எங்களுடன் இணைய

    வலைப்பூ பதிவுகள்

    The Policy of Government of India Regarding Critical Mineral is

    Feb 10 2026

    Last 20 years we made the same request, but Government

    Feb 05 2026

    நேரடி தொடர்புக்கு

    • Beach Minerals Producers Association (BMPA), இட்டமொழி ரோடு, மகாதேவன்குளம் (போஸ்ட்),
      ராதாபுரம் தாலுகா,
      நெல்லை மாவட்டம், தமிழ்நாடு - 627657

    • +91 4637 293331

    • info@beachminerals624944999.wpcomstaging.com

    Copyright@2026