கடலோர கனிம உற்பத்தியாளர்கள் சங்கம் 1995ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மொத்த உற்பத்தியாளர்களை ஒருங்கிணைக்கவும், துறையில் நிலையான வளர்ச்சியை உருவாக்கும் நோக்கத்துடனும் இச்சங்கம் அமைக்கப்பட்டது. உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், வர்த்தகர்கள், ஊழியர்கள், அவர்களின் குடும்பங்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்துள்ள சங்கம் நாட்டிலேயே BMPA-தான். கடந்த 30 ஆண்டுகளாக கார்னெட், இல்மனைட், சிர்கான், ருட்டைல், லியுகாக்ஸின் மற்றும் சில்லிமனைட் ஆகிய கடலோர கனிமங்களை அகழ்வெடுக்கும் நிறுவனங்களை சார்ந்த 120 க்கும் மேற்பட்டவர்களை உறுப்பினர்களாக BMPA கொண்டுள்ளது.
கடலோர கனிமவளத் தொழிற்துறையின் ஒருங்கிணைந்த மற்றும் கூட்டு முயற்சிகளுக்கு BMPA முன்னோடியாக இருக்கிறது. கடலோர கனிமவளத் தொழிற்துறை அதன் முழு ஆற்றலையும் உணரும் பொருட்டு உறுப்பினர்களோடும் அதிகாரிகளோடும் இணைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணர்வோடு BMPA தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
இந்திய தர நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற அமைப்பான BMPA, ஒவ்வொரு வருடமும் 5,000 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி ஈட்டி தருவதோடு, 50,000 பேருக்கு வேலைவாய்ப்பையும், சமூக நலத்திட்டங்களையும் அளித்து வருகிறது.
கடலோர கனிம உற்பத்தியாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு உருவாக்கப்பட்டதே BMPA சங்கம். இந்தியாவில் கனிம வளம் ஏராளமாக ஆசிர்வதிக்கப்பட்டிருந்தாலும், கடற்கரைத் தாதுக்களின் உண்மையான வணிக அருமை இன்னும் உணரப்பட வேண்டும். இரும்பு, நிலக்கரி, பாக்சைட் ஆகியவற்றின் சுரங்க நிறுவனங்களுக்காக தனித்தனியே சங்கங்கள் இருக்கின்றன. இவை மொத்தத்தையும் உள்ளடக்கிய சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடிய, கடலோர கனிமவளத் தொழிற்துறைக்கென ஒற்றை அமைப்பு இருக்கவில்லை.
அரசுடன் பேச்சுவார்த்தை
இந்திய தர நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றிருப்பதால் BMPA மத்திய அரசாலும் மாநில அரசாலும் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் ஆகும். இதன் காரணமாக சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளில் கடலோர கனிம நிறுவனங்களின் குரலாக BMPA உள்ளது.
கருத்துரைகள், பயிற்சிகள் மற்றும் கண்காட்சிகள்
கடலோர கனிமவளத் தொழிற்துறையின் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் சார்ந்த கருத்துரைகளையும், பயிற்சி பட்டறைகளையும், கண்காட்சிகளையும் BMPA தொடர்ந்து நடத்தி வருகிறது. துறையின் பல தளங்களில் உறுப்பினர்கள் இருப்பதால் அவர்கள் வழங்கும் அறிவுப்பகிர்வு, கடலோர கனிம அகழ்வு, உற்பத்தி, வளர்ச்சி, விற்பனை, விளம்பரம் மற்றும் சமூக வளர்ச்சி என பல நிலைகளில் உபயோகப்படும் வாய்ப்புகளை வழங்குகிறது.
பெண்களுக்கான தொழில் முனைவோர் திட்டங்கள்
கடலோர கனிமவளத் தொழிற்துறையில் பணிபுரியும் வகையில் மகளிருக்கான தொழில் முனைவோர் திட்டங்களை BMPA அளிக்கிறது. துறைக்கு சம்பந்தப்பட்ட இதர சங்கங்களுடனும் தொடர்பை ஏற்படுத்தவும், கடலோரப் பகுதிகளில் வாழும் பெண்களின் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்தை இத்திட்டம் நோக்கங்களாக கொண்டு செயல்படுகிறது.
BMPA – உங்களின் தொழில் ஆலோசகர்
துறைசார் அனுபவம் கொண்ட வல்லுனர்களை கொண்டு அரசின் சட்டதிட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பான விளக்கங்களையும், ஆலோசனைகளையும் உறுப்பினர்களுக்கு BMPA வழங்குகிறது.
சர்வதேச அங்கீகாரம்
BMPA வின் உறுப்பினராக இருப்பதால் உலகளவில் நடக்கும் கடலோர கனிமவளத்துறை மாநாடுகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டும். சமீபத்திய தொழில்நுட்பங்கள், உலக அளவிலான வளர்ச்சி, புது தயாரிப்புகளின் அறிமுகம், வளர்ச்சி, சந்தைப்படுத்தும் உத்திகள், விளம்பர உத்திகள் என பலதரப்பட்ட தலைப்புகளில் நடக்கும் இந்த மாநாடுகளில் உறுப்பினர்கள் பங்குபெற BMPA உதவி செய்யும். Mineral Processing Technology MPT 2017, National Conference on Critical and Strategic Materials for Advanced Technologies, Pollution and Global Warming Conference (USA) போன்றவை சமீபத்தில் நம் உறுப்பினர்கள் கலந்து கொண்ட சில மாநாடுகள் ஆகும்.
கடலோர கனிமங்களை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் அகழாய்வு செய்யும் BMPA வின் தொடர் முயற்சிகள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அங்கிகாரம் பெற்றுள்ளது. உறுப்பினர்கள் தம் திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் புதுமையான முயற்சிகளை மேற்கொள்ளவும் BMPA வாய்ப்பளிக்கிறது. துறையிலுள்ள நடைமுறைகளை மேம்படுத்த உதவும் இத்தகைய முயற்சிகள் புதிய நடைமுறைகள் உருவாகவும் உதவுகிறது.