ஜனவரி 28ம் தேதி நடைபெற்ற கேபக்சில் (இந்திய வணிக மற்றும் தொழிற்துறை) சார்பில் புதுடில்லி, விக்யான்பவனில் நடைபெற்ற விழாவில் டிரான்ஸ்வேர்ல்ட் கார்னட் இந்தியா பி லிட் கம்பெனிக்கு மத்திய அமைச்சர் திரு.கல்ராஜ் மிஸ்ரா அவர்கள் சிறந்த ஏற்றுமதியாளருக்கான விருதினை வி.வி.குரூப் சீனியர் மேனேஜர் திரு.சக்திகணபதி அவர்களிடம் வழங்கினார்.
டிரான்ஸ்வேர்ல்ட் கம்பெனி கார்னட் கனிமங்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் சிறந்த நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சிறந்த உற்பத்தி முறை , சிறந்த சுற்றுப்புறச்சூழல் பராமரிப்பு, தொழிலாளர் பாதுகாப்பு முறைக்காக ஜெர்மனியை சேர்ந்த TUV நிறுவனத்திடமிருந்து ISO 9001, ISO 14001 & OHSAS 18001 சான்றிதழ்களை பெற்றுள்ளது.
இக்கம்பெனி ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை நிறுவி, சிறந்த உற்பத்தி முறை மற்றும் வேலை வாய்ப்பு வழங்குவதற்காக தகுதி வாய்ந்த பொறியாளர்கள், புவியியலாளர்கள் உட்பட தேவையான பணியாளர்களை நியமித்து ஏராளமான நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இலவச இருப்பிடம், வாகன வசதி, கேண்டீன் வசதி மற்றும் இதர சட்டப்பூர்வ வசதிகளை செய்து தொழிலாளர்கள் நலனை மேம்படுத்திவருகிறது.
இக்கம்பெனி வருடம்தோறும் ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் கல்வி பயில ஊக்குவிக்கும் பொருட்டு இலவச நோட்டு புத்தகங்களை தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் அதன் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள கிராமபுற மாணவர்களுக்கு வழங்கி வருகிறது .இதன் மூலம் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து வருகிறது.மேலும் இந்நிறுவனம் தொடர்ந்து பல வருடங்களாக இந்த சிறந்த ஏற்றுமதியாளர் விருதினை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.