வி.வி.மினரலுக்கு எதிராக திட்டமிட்டு பொய் செய்தி பரப்ப படுவது பற்றி ஒரு விளக்கம்
(Link : https://www.facebook.com/saveearthcampaigns?fref=ts)
மேற்கண்ட இணைப்பில் வி.வி.மினரலுக்கு எதிராக மிகவும் மோசமான நிலையில் சில பதிவுகள் செய்யப்பட்டு இருந்தன. அது பற்றி உண்மை நிலவரத்தை கீழ்கண்ட ஆவணங்களோடு எடுத்துரைத்து அதன் அடிப்படையில் முகநூலில் இருந்து மேற்கண்ட பதிவுகள் முழுவதும் நீக்கப் பட்டு விட்டன. மேலும் மேற்கண்ட பதிவு செய்த நபர் மீதும் காவல் துறை மூலம் குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. இருப்பினும் ஏற்கனவே பொய் செய்தி பரப்பப் பட்டதால் உண்மை நிலவரம் தெரிவதற்காக இந்த விபரம் வெளியிடப்படுகிறது.
நடிகர் பாக்கியராஜ் நடித்த பொய் சாட்சி திரைப்படத்தில் ஒரு கொலை வழக்கில் பொய் சாட்சி சொல்வதற்காக பாக்கியராஜ் பணம் பெற்று கொண்டு நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வரும் போது உணர்ச்சி வேகத்தில் குற்றம் சாட்டப் பட்டவரை நீதிமன்றத்தில் வைத்தே தாக்க முற்படுவது போல் நடித்து இறுதியில் அந்த அப்பாவிக்கு தண்டனை பெற்று கொடுப்பார். இந்த புகார் கூறியவர்கள் நடிப்பில் பாக்கியராஜை விட திறமைசாலிகள் என்பதில் ஐயம் இல்லை.
ஆனால் வி.வி.மினரல் நிறுவனத்தை பொறுத்த வரையில் அகில இந்தியாவிலும் அனைத்து சட்டபூர்வ அனுமதிகளையும் முறைப்படி பெற்று சட்டத்திற்கு உட்பட்டு தொழில் நடத்தும் நிறுவனத்தில் வி.வி.மினரல் நிறுவனமே முதன்மையானது. இதனை இந்திய அரசு சுரங்க துறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனத்துறை ஆகியவற்றின் இணையதளங்களை பார்வையிட்டாலேயே இது தெரியும்.
தாதுமணல் சுரங்கத்தால் உவரியில் கட்டிடங்கள் சேதம் என காட்டி வெளியிடப்பட்ட புகைப்படங்கள்
Source : http://kumaritamil.com/sea-erosion-in-niththiravilai/ )
மேற்கண்ட புகைப்படங்கள் போன்ற எந்த பகுதியும் வி.வி.மினரல் சுரங்க குத்தகை பகுதி அருகில் இல்லை. இவை அனைத்தும் பல்வேறு பகுதிகளில் கடலரிப்பால் பாதிக்கப் பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள். ஆதாரம்: http://tnfidet.blogspot.in/2012/11/pictures.html
உண்மையில் வி.வி.மினரல் நிறுவனத்திற்கு சுரங்க குத்தகை வழங்கப்பட்டுள்ள எந்த பகுதியிலும் குடியிருப்போ கட்டிடங்களோ அல்லது மீனவர்கள் வள்ளம் நிறுத்தும் இடங்களோ போன்ற எதுவும் இல்லை. இவை அனைத்தையும் உறுதி செய்து தான் அதிகாரிகள் குத்தகை வழங்க பரிந்துரையே செய்வார்கள். மேலும் கடலரிப்பு என்பது உலகம் முழுவதும் உள்ள ஒரு பொது பிரச்சனை. இதற்கு முக்கிய காரணம் கடல் நீர் மட்டம் உயர்வது. இந்த கடல் நீர் மட்ட உயர்வுக்கு முக்கிய காரணம் பருவநிலை மாற்றம் (Climate Change). இந்தியாவில் 7000 கிலோ மீட்டர் கடற்கரை உண்டு. அதில் 20 சதவீதம் அளவிற்கு அதாவது 1400 கிலோ மீட்டர் அளவிற்கு கடலரிப்பு உள்ளது. தாதுமணல் எடுப்பதற்கும் கடலரிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏனென்றால் கடல் வேண்டாம் என்று வெளியே கொண்டு தள்ளும் தாது மணலே எடுக்கப் படுகிறது. எனவே எந்த நிலையிலும் கடலரிப்பு வரவே செய்யாது.
[Source: Letter from Directorate of Coastal Erosion, Government of India].
பருவநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் கடல் நிலை நீர் மட்டம் உயர்ந்து கடலரிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் அதனை கட்டுப்படுத்தவில்லை என்றால் இன்னும் 50 ஆண்டுகளில் பெரிய நகரங்களே கடலில் மூழ்கி விடும் என்பதும் International Ocean Institute வெளியிட்டுள்ள ““Voice for the Oceans” என்ற புத்தகத்தில் தெரிய வருகிறது.
(source: Page no 7 and 9 attached for reference).
மேலும் புவி வெப்பமயமாதலால் இந்த கடலரிப்பு முதலியவை ஏற்படுகிறது என்பதை ஏற்கனவே பத்திரிக்கைகளும் வெளியிட்டு உள்ளன.
தாது மணல் அள்ளும் இடங்களில் குடியிருப்போ வீடுகளோ இல்லாத நிலையில் இந்த குற்றச்சாட்டு எவ்வாறு உள்நோக்கம் கொண்டது என்பதை நிரூபிக்கும். அதாவது சிறுவயதில் பள்ளி கூடத்தில் பொய்யாக விடுமுறை எடுக்க நாம் காய்ச்சலை சொல்ல மாட்டோம். ஏனென்றால் ஆசிரியர் கைவைத்து பார்த்து விடுவார். ஆனால் தலைவலி அல்லது வயிற்றுவலி என்று சொன்னால் இவ்வாறு கைவைத்து பார்க்க முடியாது. இவ்வாறு உலகம் முழுவதும் கடலரிப்பு இருப்பதால் கடலரிப்பு என சொன்னால் நியாயமாக இருக்கும் என இட்டு கட்டிய கதை தான் தாது மணலால் கடலிரிப்பு என்பது. உலகம் முழுவதும் கடலரிப்பு உண்டு என்பதற்கு உதாரணம் கீழே.
Source :
http://www.thehindu.com/sci-tech/effects-of-sea-level-rise-on-tamil-nadu-coast/article892055.ece
தமிழகத்தை பொறுத்த வரையில் மீனவர்கள் குடியிறுப்புகளிலோ அல்லது மீனவர்கள் வள்ளம் நிறுத்தும் இடங்களிலோ எந்த தனியாருக்கும் சுரங்க குத்தகை வழங்கப் படவில்லை. மிடாலம், கீழ்மிடாலம், குரும்பனை, சின்னவிளை, பெரியவிளை ஆகிய மீனவ கிராமங்களில் இந்திய அரசு நிறுவனமான இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்திற்கு தான் சுரங்க குத்தகை வழங்கப் பட்டுள்ளது. அங்கு சுரங்க பணி செய்து மணல் அள்ளி கொடுப்பதே மீனவர்கள் தான்.
மேலும் கடலோர மேலாண்மை விதியின் கீழ் இந்திய அரசின் CRZ Clearance இல்லாமல் 21.05.2002-க்கு பிறகு எந்த சுரங்க குத்தகையும் வழங்கப்பட முடியாது. வி.வி.மினரல் நிறுவனம் இவ்வாறு எல்லா அனுமதிகளும் பெற்று சுரங்க குத்தகை பெற்றுள்ளதால் தான் சுனாமியின் போது கூட வி.வி.மினரல் நிறுவனத்தின் எந்த பகுதியும் பாதிக்கப்படவில்லை.
சில நேரங்களில் கடல் சீற்றம் வேகமாக இருக்கும். இதனை எல்லாம் பார்த்து கடல் சீற்றம் இன்று அதிகமாக இருக்கும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுவது வழக்கம். இதுவும் இந்த புகார்கள் பொய் என்பதை நிரூபிக்கும்.
வி.வி.மினரல் சுரங்க குத்தகை பகுதியில் எந்த குடியிருப்பும் இல்லை என்பதை காட்டும் புகைப்படம் கீழே இணைக்கப் பட்டுள்ளது.
சுனாமியால் ஏராளமான தாது மணல்கள் கடலால் வெளியே தள்ளப் பட்டுள்ளது. சுமார் 70 சதவீத அளவிற்கு கூட தாது மணல் வெளியே தள்ளப்பட்டுள்ளது என்பதை கீழ்கண்ட இணைப்பில் தற்போது வி.வி.மினரலுக்கு எதிராக திரு.தயாதேவதாசிடம் பணம் வாங்கி கொண்டு பேட்டி கொடுக்கும் திரு.விக்டர் ராஜமாணிக்கமே அப்போது கூறியதை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம்.
(Source : http://ramsethu.org/expert2.html)
உவரி மீனவ கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் வி.வி.மினரல் நிறுவனத்திற்கு எந்த சுரங்க குத்தகையும் இல்லை. கடல் சீற்றத்தால் இப்பகுதி பாதிக்கப்படுகிறது. இந்த விபரங்கள் 12.09.2010 அன்று தினத்தந்தி பத்திரிக்கையில் புகைப்படத்தோடு வெளிவந்தது. அது கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
இன்னும் முக்கியமானது உவரி அந்தோனியார் கோவில் மற்றும் கப்பல் மாதா கோவில் மற்றும் அங்குள்ள குடியிருப்புகள் அதிகம் பாதிக்கப்படும் போது அங்குள்ள பங்கு தந்தை மற்றும் பஞ்சாயத்து தலைவர் வேண்டுகோளின் படி வி.வி.மினரல் நிறுவனத்தில் இருந்து தான் கழிவு மணல் அங்கு கொண்டு சென்று தட்டப்பட்டு கடலரிப்பால் அதிக சேதாரம் ஏற்படாமல் பாதுகாக்கப் படுகிறது. கடல் சீற்றத்தால் உவரி பாதிக்கப்படாமல் தடுக்க தூண்டில் வளைவு வேண்டும் என மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து மாவட்ட ஆட்சியர் பரிந்துரை படி அரசு தூண்டில் வளைவு அமைக்க ஆணையிட்டு தற்போது அந்த வேலையும் நடந்து வருகிறது. தூண்டில் வளைவு சரியாக அமைக்கப்படவில்லை என்பது பற்றி கூட சில தினங்களுக்கு முன்பு சில தனியார் தொலைகாட்சியில் செய்தி வெளியானது.
முகநூலில் பெரியதாழையில் வி.வி.மினரல் மணல் அள்ளுவதால் கடல் நீர் சிகப்பாகி விட்டது என்ற ஒரு பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது.
உண்மையில் பெரியதாழையில் வி.வி.மினரல் நிறுவனத்திற்கு சுரங்க குத்தகையே கிடையாது. மாறாக பெரியதாழையில் திரு.தனுஷ்கோடி ஆதித்தன் இயக்குனராக இருந்து திரு.தயாதேவதாஸ்க்கு உரிமை உள்ள இந்தியன் கார்னட் சாண்ட் கம்பெனிக்கு மட்டுமே சுரங்க குத்தகை உள்ளது. (அரசாணை எண் 11 தொழிற்துறை நாள் 15.01.94). மேலும் மேற்கண்ட படம் திருச்செந்தூருக்கு வடபுறம் எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால் திருச்செந்தூரில் இருந்து புன்னக்காயல் வரை உள்ள கடற்கரை பகுதி மட்டுமே இம்மாதிரி சிகப்பு நிறத்தில் இருக்கும். இதை திருச்செந்தூர் கோவிலுக்கு சஷ்டி காலத்தில் செல்லும் போது பார்க்கலாம். இப்பகுதிகளிலும் வி.வி.மினரல் நிறுவனத்திற்கு எந்த சுரங்க குத்தகையும் இல்லை.
Please refer to the article published in Dinakaran News paper 1st Jan 2012. (Source enclosed).
The photos taken in Uvari from Kappal Madha church and their boat parking areas are attached below, which will clearly reveal the sea water colour is no way different.
மேலும் பல்வேறு காரணிகளால் கடல் நீர் நிறம் மாறுவது வழக்கம். இது உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும். ஆதாரம் கீழே.
மேலும் கீழ்கண்ட புகைப்படத்தை வெளியிட்டு வி.வி.மினரல் தாது மணல் அள்ளுவதால் இந்த கட்டிடங்கள் இடிந்து விட்டன என வெளியிட்டார்கள். உண்மையில் இது இந்திய அரசு நிறுவனத்திற்கு சுரங்க குத்தகை உள்ள கிராமத்தில் உள்ளது. அந்த படத்தை போட்டு வி.வி.மினரலுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்தார்கள்.
It is pertinent to point out here that on the face book this picture was mentioned that Periyathalai in Tirunelveli District. In fact, Periyathalai is situated in Tuticorin District of Padukapathu village and V.V.Mineral has no mining lease and only Indian Garnet Sand Company belongs to Dayadevadas alone have mining lease vide G.O.Ms.No. 11 dated 15.01.94.
உவரி பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு திரு.அந்தோனிராய் என்பவரும் உவரி புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.பவர்சிங் என்பவர் மனைவி திருமதி தேம்பாவணி என்பவரும் போட்டியிட்டார்கள். இதில் திரு.பவர்சிங் மனைவி வெற்றி பெற்றார். அந்தோனிராய் தோல்வி அடைந்தார். திரு.பவர்சிங் வி.வி.மினரல் வைகுண்டராஜனின் உயர்நிலைப்பள்ளி வகுப்பு தோழர். எனவே திரு.அந்தோனிராய் வைகுண்டராஜன் தான் செல்வாக்கை உபயோகித்து தன்னை தோற்கடித்து விட்டதாக எண்ணி வைகுண்டராஜனுக்கும் வி.வி.மினரலுக்கும் எதிராக பேட்டி கொடுப்பது, அறிக்கை கொடுப்பது என செய்து வருகிறார். உண்மையில் அந்தோனிராய் ஏராளமான ஏழை குழந்தைகளை ஏமாற்றி பெரும் தொகை மோசடி செய்தவர். இது சம்பந்தமாக சுமார் 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு ஏராளமான வழக்குகளில் அவர் கைதும் செய்யப் பட்டு உள்ளார். தற்போது மீனவர் கூட்டுறவு சங்கத்தில் இருந்து பொது வினியோக திட்டத்திற்கு உள்ள உணவு பொருள் மற்றும் மண்ணென்ணெய்யை விற்பனை செய்து அந்த தொகையை கையாடல் செய்து விட்டார் என மீன் வளத்துறை உதவி இயக்குனர் புகார் கொடுத்து அதில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
In support of Mining Activities: It has to be noted that the following Seven Panchayat presidents and the panchayat members along with the public had submitted a memorandum in support of these mining companies in the area as the Mining companies are the major source of employment for part of these villages.
The seven fishermen panchayats are :
- Kooduthalai
- Kootapanai
- Uvari
- Kuthenkuzhi
- Idinthikarai
- Perumanal
- Kootapuzhi
The pictures are doesn’t belong to VVM mining areas and any where near our operations. But these operations are in Kerala State near Chavara by Central and State Government companies. So this is also clearly a false allegation levelled against V.V.Mineral.
வி.வி.மினரல் நிறுவனத்திற்கு வழங்கப் பட்டுள்ள சுரங்க குத்தகைகளில் ஆறு குத்தகைகள் தவிர இதர அனைத்தும் அவர்களது சொந்த பட்டா நிலத்தில் வழங்கப் பட்டுள்ளது. இது கடற்கரை அருகில் இருக்கும். ஆனால் காற்று இப்பகுதியில் கனிமங்களை சேகரித்து கொடுக்கும். கீழே உள்ள படம் இதனை நிரூபிக்கும்.
இந்த பொய் புகார்களின் பின்னணி
திரு.தயாதேவதாஸ் என்பவருக்கும் வி.வி.மினரலுக்கும் கொரியாவில் உள்ள ஒரு வாடிக்கையாளரை பிடிப்பது சம்பந்தமாக 1988 முதலே பகை உண்டு. திரு.தயாதேவதாஸ் 1988-லேயே கொரியாவிற்கு சென்று அரசியல் பலத்தோடு அங்குள்ள வாடிக்கையாளரை கவர நினைத்தார். ஆனால் கொரியா வாடிக்கையாளர் தரத்திற்கும் நேர்மைக்கும் பெயர் போன வி.வி.மினரல் நிறுவனத்தை விட்டு மாறவில்லை. ஆதாரம் : டெலக்ஸ்
அதன் பிறகும் கொரிய வாடிக்கையாளர்கள் வி.வி.மினரலை விட்டு மாறாததால் வி.வி.மினரல் இல்லீகல் மைனிங் செய்கிறார்கள் என 1989-லேயே தயாதேவதாஸ் கொரியாவிற்கு கடிதம் எழுதினார். ஆதாரம் : கடிதம் :
பல்வேறு பெயர்களில் ஏராளமான புகார் மனுக்கள் எழுதினார். அனைத்து புகார்களும் விசாரணைக்கு பிறகு தள்ளுபடி செய்யப்பட்டன. எனவே புகார் முறையை மாற்றி பெடரேசன் ஆப் இந்தியன் பிளேசர் மினரல் இன்டஸ்ட்ரி என ஒரு கம்பெனியை பதிவு செய்து அதனை பெடரேசன் என நம்ப செய்து புகார் எழுதினார். இது சம்பந்தமாக சிபிஐ உரிய விசாரணை நடத்த கம்பெனி பதிவாளருக்கு உத்தரவிட்டது. ஆதாரம் :
உண்மையில் திரு.தயாதேவதாஸ் தான் சட்டபுறம்பாக சுரங்க பணி செய்தவர். ஆனால் தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி தொழில் போட்டியாளரான வி.வி.மினரலுக்கு இடையூறு செய்வதை தொடர்ந்து கடைபிடித்து வருபவர். பல்வேறு முறை சட்டவிரோத சுரங்க பணிகளில் இவர் ஈடுபட்டு அதிகாரிகளால் கையும் மெய்யுமாக பிடிக்கப் பட்டு உத்தரவு பிறப்பிக்க காலதாமதம் செய்தாலும் கூட இறுதியில் இவருக்கு அபராதம் தண்டதொகை முதலியவை விதிக்கப்பட்டுள்ளன. 4000 டன்னுக்கு ராயல்டி செலுத்தி விட்டு 12000 டன் குவாரி செய்து கொண்டு சென்றதை அதிகாரிகள் கண்டுபிடித்து அபராதம் பிறப்பித்த உத்தரவு இணைப்பு :
அதன் பிறகும் தயாதேவதாஸ் மெகா கனிம கொள்ளையில் ஈடுபட்டு சுமார் 3 லட்சம் டன்னுக்கு ராயல்டி செலுத்தி விட்டு 39 லட்சம் குவாரி செய்து கொண்டு சென்றதை அதிகாரிகள் கண்டுபிடித்து அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அவரது சுரங்க குத்தகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. http://www.beachminerals.org/large-scale-illegal-mining-major-violations-tamilnadu-govt-determine-mining-lease-granted-southern-enterprises-belongs-dayadevadas-claim-president-federation-o/
மேற்கண்ட நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காகவும் வி.வி.மினரல் நிறுவனத்தை பழிவாங்கவும் அதன் வாடிக்கையாளர்களை சிதறடிக்கவும் சில ஓய்வு பெற்ற அலுவலர்களை தனது பணபலத்தாலும் அரசியல் செல்வாக்காலும் கையில் எடுத்துக் கொண்டு அவர்களை வைத்து சில தனியார் தொலைகாட்சிகளில் உண்மைக்கு புறம்பான பேட்டிகளை கொடுக்க வைத்து வி.வி.மினரலுக்கு எதிராக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வந்தார். அவையும் அதிகாரிகளால் தீவிர விசாரணைக்கு பிறகு பொய் என்பது அறிக்கை செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக திரு.சுந்தரம் ஐஏஎஸ் என்பவரை வைத்து ஒரு பெரிய புகாரை கொடுக்க வைத்து பத்திரிக்கைகளிலும் தொலைகாட்சிகளிலும் பெரிய பேட்டிகள் கொடுத்தார். ஆனால் திரு.சுந்தரம் புகாரின் பேரில் மத்திய மாநில அரசு அதிகாரிகள் கூட்டு ஆய்வு செய்து திரு.சுந்தரத்தின் புகார் பொய் என்பதை இந்திய அரசுக்கு அறிக்கை செய்தார்கள். மேற்கண்ட அறிக்கை நகல் http://www.beachminerals.org/wild-allegations-leveled-v-v-mineral-v-sundaram-ias-found-wrong-motive-envy-vindictive-far-away-truth/ இணைப்பில் உள்ளது. இதனை இந்திய அரசிடம் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்திலும் தருவித்து பார்த்துக் கொள்ளலாம்.
திரு. சுந்தரம், விக்டர் ராஜமாணிக்கம் போன்றோர் தயாதேவதாசிடம் பணியாற்றுகிறார்கள் என்பதும் அவருக்காக இவர்கள் பொய் புகார்கள் கொடுக்கிறார்கள் என்பதும் இவர்கள் எல்லாம் இந்த சட்ட விரோத சதி கும்பலின் உறுப்பினர்கள்; என்பதும் www.beachminerals.org இணையத்தில் உள்ள http://www.beachminerals.org/video-home/ என்ற இணைப்பில் உள்ளது.
மேற்கண்ட வீடியோவிலேயே திரு.ஆஷிஷ்குமாரை நான் தான் புகார் எழுத வைத்தேன என திரு.சுந்தரம் ஐஏஎஸ் ஓய்வு கூறுவதை காணலாம். எனவே ஒரு மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமாரின் அறிக்கையும் உள்நோக்கத்தோடு பொய்யாக தயாரிக்கப்பட்டது. இது பற்றிய விபரங்களை பல்வேறு அரசு அலுவலகங்களிலும் மற்றும் தமிழ்நாடு தகவல் ஆணையர் மூலமும் போராடி வாதாடி பெற்று திரு.ஆஷிஷ்குமார் மீது குற்ற வழக்கு தொடர அனுமதி கேட்டு வி.வி.மினரல் திரு.வைகுண்டராஜன் அரசுக்கு ஏற்கனவே மனு அனுப்பி உள்ளார். மேற்கண்ட மனு மற்றும் இணைப்புகள் http://www.beachminerals.org/complaint-ashish-kumar-ias-making-false-report-v-v-mineral-part/ உள்ளது. திரு.ஆஷிஷ்குமாரின் அறிக்கையின் பின்னணி என்ன என்பதை நண்பர் வெற்றிவேல் என்பவர் அவரது முகநூலில் 2015 மார்ச் 8 அன்று நான்கு பதிவுகளாக https://www.facebook.com/iruthayaannai/posts/799585323454858 வெளியிட்டுள்ளார். அதனையும் பார்த்துக் கொள்ளலாம். மேலும் ஆஷிஷ்குமார் ஐஏஎஸ் அறிக்கை உள்நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டது என்பதற்கு இதே போல் ஆவணங்களோடு விரிவான ஒரு பதிவு அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.
தற்போதைய தகவல் படி மேற்கண்ட மனு லஞ்ச ஒழிப்பு துறையால் விசாரிக்கப் பட்டு தொடர்புடைய கோப்புகள் கைப்பற்றப்பட்டு ஆஷிஷ்குமார் ஐஏஎஸ் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்படுவதாக தெரிய வருகிறது.
ஆனாலும் கூட அவ்வப்போது காசுக்கு விலைபோகும் சில பத்திரிக்கையாளர்களை பொறுக்கி எடுத்து பொய்யான தகவலை கொடுத்து சில செய்திகளை வெளியிட செய்கிறார்கள். தகவல் தெரிந்து சட்ட பூர்வ நடவடிக்கை எடுத்து அதற்கு மறுப்பு செய்திகள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. ஏராளமான தவறான பதிவுகள் எங்களது ஆதாரபூர்வமான புகாரின் அடிப்படையில் பரிசீலனைக்கு பிறகு சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் கூட ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் என இந்த கொள்ளை கூட்டத்தில் சம்பந்தப்பட்ட திருமதி சந்தியா ரவிச்சந்திரன் என்பவரை வைத்து ஒரு பத்திரிக்கையில் செய்தியை வெளியிட வைத்து அதை வைத்து ஒரு சிபிஐ விசாரணை வேண்டும் என அரசை தாக்கி பல்வேறு அரசியல் கட்சிகள் அறிக்கை விட ஏதுவாக செய்தார்கள். இறுதியில் இது சம்பந்தமாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க அறிவிப்பு அனுப்பி சட்டபூர்வ நடவடிக்கை தொடங்கிய உடன் மேற்கண்ட பத்திரிக்கையிலேயே அந்த செய்தி தவறு என்பதை தெரிந்து அது எந்த ஆதாரங்களையும் பரிசீலிக்காமல் நிலுவையில் உள்ள ஒரு ரிட் மனுவின் அடிப்படையில் மட்டுமே போடப்பட்டது. தவறுக்கு வருந்துகிறோம் என சிறிதாக முடித்து விட்டார்கள். இது கடந்த 17.05.2015 அன்று எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையிலேயே தவறுக்கு வருந்துகிறோம் என வெளியிட்டார்கள். எனவே ஊடகங்கள் அவர்களது வாசகர்கள் வட்டத்தை பெருக்குவதற்காக இவ்வாறு மிகைப்படுத்தி அவ்வப்போது செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆதாரம் கீழே.
சிபிஐ விசாரணைக்கு அல்லது இதர விசாரணைக்கு உங்களுக்கு என்ன ஆட்சேபணை என கேட்கலாம். இந்தியா போல் அல்ல இதர நாடுகள். வளர்ந்த நாடுகளுக்கும் ஐரோப்பியா, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளுக்கும் வி.வி.மினரல் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த நாடுகளின் சட்டப்படி எதாவது ஒரு நிறுவனத்திற்கு எதிராக ஒரு சட்டபூர்வ வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தால் அந்த நிறுவனத்திடம் இருந்து மேற்கண்ட நாட்டின் நிறுவனங்கள் எந்த பொருளையும் வாங்க முடியாது. எனவே இவ்வாறு ஒரு விசாரணை என கேட்டு அதற்கு உத்தரவு பெற்றாலே தன்னால் 25 வருடங்களாக போராடி நிறுத்த முடியாத வி.வி.மினரல் நிறுவனத்தின் விற்பனையை நிறுத்தி வைக்க முடியும். இந்த உள்நோக்கத்தோடு தான் பல்வேறு அரசியல்வாதிகள், பத்திரிக்கையார்கள், ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆகியோரை வைத்து தொழிற் போட்டியினால் திரு.தயாதேவதாஸ் இந்த செயல்களை செய்து வருகிறார்.
உலகத்தில் 30 வெள்ளி காசுக்காக ஏசுபிரானையே காட்டி கொடுத்த சீடர்கள் இருக்கும் போது திரு.தயாதேவதாஸ் வீசி எறியும் சில லட்சங்களுக்காக ஓய்வு பெற்ற அதிகாரிகள் பேட்டி கொடுப்பதிலும் புகார் எழுதுவதிலும் என்ன ஆச்சரியம்!! ஆனால் தோழர் வெற்றிவேல் கூறியது போல் இவர்கள் அறிவை காசுக்காக விற்பவர்கள். இவர்கள் எந்த புகாரிலாவது வி.வி.மினரல் உரிமம் இல்லாத இந்த புல எண்ணில் அல்லது இந்த கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளி இருக்கிறார்கள் என கூற மாட்டார்கள். அல்லது அவர்கள் அரசுக்கு ராயல்டி செலுத்தியது குறைந்த அளவு. ஆனால் ஏற்றுமதி செய்ததது அதை விட அதிகம். இதோ அதற்கான ஆதாரம் என கூற மாட்டார்கள். ஆனால் தொடர்ந்து இல்லீகல் மைனிங் என்பதை உடைந்த ரெக்கார்ட் போல் சொல்வார்கள். இவர்கள் இவ்வாறு வேகமாக கூறுவதற்கு காரணம் அரசு அதிகாரிகள் அவர்கள் செய்த சட்ட விரோத செயலை கவனிக்காமல் இருக்க தான்.
வி.வி.மினரல் நிறுவனத்தை பொறுத்த வரையில் சட்டத்திற்கு உட்பட்டு நியாயப்படி நடக்கும் நிறுவனம். சட்ட விரோதமாக எந்த செயலையும் செய்வதில்லை. இதனால் தான் கடந்த 21 வருடங்களாக இந்திய அரசிடம் இருந்து சிறந்த ஏற்றுமதியாளர் விருதை தொடர்ந்து பெற்று வருகிறது. தூத்துக்குடி துறைமுக சபையில் இருந்து கடந்த 10 வருடங்களாக அதிக அளவு ஏற்றுமதி செய்தவர்கள் என்ற விருதையும் பெற்று வருகிறது. சட்டவிரோதமாக இதில் எந்த பணியும் செய்ய முடியாது. ஏனென்றால் இது 18 துறைகளில் அனுமதி பெற்று செயல்படும் ஒரு நடவடிக்கை. இதனால் தான் முதலில் சட்டவிரோத சுரங்க பணி என்று கூறியவர்கள் அதன் பிறகு தங்கள் புகாரை மாற்றி தோரியம் நிறைந்த மோனோசைட்டை ஏற்றுமதி செய்து விட்டார்கள் என கூறினார்கள்.
உண்மையில் மோனோசைட் ஏற்றுமதியே செய்யப்பட முடியாது. மோனோசைட் இருந்தால் அந்த சரக்கையே யாரும் வாங்க மாட்டார்கள். மேலும் ஏற்றுமதி அல்லது இறக்குமதியாகும் பொருட்களில் மோனோசைட் அல்லது இதர கதிரியக்க பொருட்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதை சுங்க துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தான் ஏற்றுமதி அல்லது இறக்குமதியை அனுமதிப்பார்கள். அந்த ஆய்விற்கு தேவையான உபகரணங்கள் அவர்களிடமே உள்ளது. மேலும் கதிரியக்க பொருள் கப்பலில் இருந்தால் கப்பல் மாலுமிகளுக்கு ஆபத்தாகி விடும் என்பதால் கப்பலிலும் கதிரியக்க பொருள் ஏற்றுமதி செய்யப் பட்டால் அலாரம் அடிக்கும் வசதி உண்டு. எனவே திருட்டுதனமாகவே மறைமுகமாகவே இதனை ஏற்றுமதி செய்ய முடியாது. மேலும் இந்தியாவை தவிர இதர எல்லா நாடுகளிலும் மோனோசைட் விலை மலிவாகவே கிடைக்கிறது. இதனால் இந்திய அரசாங்கம் கூட 2004-ல் இருந்து மோனோசைட் உற்பத்தியையே நிறுத்தி விட்டது. இதனை பாராளுமன்றத்தில் பிரதமர் சார்பாக ராஜ்யசபாவில் குறியிடப்படாத கேள்வி எண் 420-க்கு 26.11.2014 அன்று கொடுக்கப்பட்ட பதிலில் தெரியலாம். இணைப்பு : http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=111923
வி.வி.மினரல் மற்றும்; அதன் பங்குதாரர் திரு.வைகுண்டராஜன் பற்றி திட்டமிட்டு பரப்பப் படும் ஒரு பொய் பிரச்சாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இவை வெளியிடப் படுகிறது.
மேலதிக தகவலுக்கு வி.வி.மினரல் இணையதளத்தையும், முகநூலில் VV Mineral News Release, www.southernmines.org , www.coastalenviroment.org–ம் பார்த்துக் கொள்ளலாம். மேலும் விபரம் வேண்டும் என்றால் அதற்கும் தயார்.