VV Mineral Becomes Top Exporter for the 7th Time

Beach Minerals

Feb 04 2016

V.V.Mineral represented by V.Subramanian, Director, receiving the prestigious “Top Export Award” from Honourable Minister of Micro, Small and Medium Enterprises Shri Kalraj Mishra.

VVM receives this award for the past 22 consecutive years and is the only producer to receive this prestigious Capexil award in the “Bulk Minerals sector” among all Heavy mineral mining companies.

 

Untitled

 

capex

METADATA-/scanq/scantofile0037.tif
METADATA-/scanq/scantofile0037.tif

டெல்லியில் ஜனவரி 28ம் தேதியன்று நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் திரு.கல்ராஜ் மிஸ்ரா அவர்கள் வி.வி.மினரல் நிறுவனத்தின் இயக்குநர் திரு.வி.சுப்பிரமணியன் அவர்களிடம் இந்தியாவின் உயர்ந்த ஏற்றுமதியாளர் விருதினை வழங்கினார்.

இந்;நிறுவனம் தாது மணல் கனிமங்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் சிறந்த நிறுவனமாக கடந்த 1992 முதல் மத்திய அரசின் சிறந்த ஏற்றுமதியாளர் விருதை பெற்று வருகிறது.

இந்நிறுவனம் சிறந்த உற்பத்தி முறை, சிறந்த சுற்றுப்புறச்சூழல் பராமரிப்பு, தொழிலாளர் பாதுகாப்பு முறைக்காக ஜெர்மனியை சேர்ந்த TUV நிறுவனத்திடமிருந்து ISO 9001:2008, ISO 14001:2007 & OHSAS 18001:2004 சான்றிதழ்களை பெற்றுள்ளது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் தாது மணல் சுரங்க குத்தகைகளையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதியும் பெற்றுள்ளது.

தூத்துக்குடி துறைமுகத்தின் வழியாக அதிக அளவு கனிமங்களை ஏற்றுமதி செய்ததற்காக தூத்துக்குடி துறைமுக சபையின் விருதையும் கடந்த 12 வருடங்களாக பெற்று வருகிறது. இந்திய அரசு இந்நிறுவனத்திற்கு “Star Trading House ” என்ற சிறப்பு அனுமதியை வழங்கி மத்திய மாநில அரசு துறைகளிடம் இருந்து முன்னுரிமை பெறுவதற்கான கிரீன் கார்டும் வழங்கி உள்ளது.

இந்நிறுவனத்தின் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் கனிம பொருட்கள் புவி வெப்பமயமாதலை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும்; நவீன கம்ப்யூட்டர், செல்போன், உயர்ரக கார் என எல்லா தொழில்களுக்கும் தேவையான காரணியாகவும் அமைகிறது.

சிறந்த உற்பத்தி முறை மற்றும் வேலை வாய்ப்பு வழங்குவதற்காக தகுதி வாய்ந்த பொறியாளர்கள், புவியியலாளர்கள் உட்பட தேவையான பணியாளர்களை நியமித்து ஏராளமான நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது.

இந்நிறுவனம் ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்குவதோடு, இலவச மருத்துவ வசதி வழங்குவதற்கு மருத்துவமனையும், ஏழை மாணவர்கள் கம்யூட்டர் பயில கம்யூட்டர் மையங்களையும் இலவசமாக நடத்தி வருகிறது. சுரங்க பகுதியின் அருகில் உள்ள கிராமங்களுக்கு இலவச கழிப்பறையும் அமைத்து கொடுத்துள்ளது.

கடந்த 7 வருடங்களாக இந்தியாவில் Top Exporter Award  தமிழ்நாட்டை சேர்ந்த விவி மினரல் நிறுவனத்திற்கு கிடைத்திருப்பது நம் மாநிலத்திற்கு ஒரு பெருமை தானே!!

Daily Thanthi News

dinamalar

 

Dinamalar Paper News

 

4 thoughts on “VV Mineral Becomes Top Exporter for the 7th Time”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss on our latest updates

SIGN UP TODAY

[contact-form-7 id="170" title="Subscribe"]