நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உள் கட்டமைப்பு வசதிக்கும் கனிமங்கள் இன்றியமையாதவை – தொழிற்துறை அமைச்சர் ஒப்புதல்

Beach Minerals

Jun 14 2018

தமிழக சட்டமன்றத்தில் தொழிற்துறை மானிய கோரிக்கையின் மீது சமர்பித்த கொள்கை விளக்க குறிப்பில் நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் கனிமங்கள் இன்றியமையாதவை என்றும் எனவே அவற்றின் குத்தகைகள் கொடுக்க வேண்டியது அவசியம் என்பதையும் தொழிற்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆண்டுக்கு ஆண்டு கனிமங்கள் மூலம் அரசின் வருவாய் கூடி வருவதையும் சட்டவிரோதமாக குவாரி செய்த வகையில் 8720 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு 28.62 Crore Rupees அபராதமாக வசூலிக்கப்பட்ட விபரத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், நாட்டின் அத்தியாவசிய தேவையான அந்நிய செலவாணி ஈட்டுவதற்கும் முக்கிய பங்கு வகிக்கும் தாது மணல் தொழில் வீணே நிறுத்தப்பட்டுள்ளதால் அரசுக்கும் நாட்டிற்கும் தொழிலாளர் நண்பர்களுக்கும் எவ்வளவு இழப்பு. சிந்திக்க வேண்டாமா?

Link : http://www.tnmine.tn.nic.in/GO/Ind-pn-2017-18.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss on our latest updates

SIGN UP TODAY

[contact-form-7 id="170" title="Subscribe"]