
தாது மணல் உற்பத்தியில் இந்தியாவை உலகின் நம்பர் 1 நாடாக மாற்றிய தமிழ்நாட்டின் விவி மினரல்
Beach Minerals
Oct 23 2015
உலக தாது மணல் இருப்பில் 35 சதவீதம் இந்தியாவில் உள்ளது. ஆனால் ஏற்றுமதி அளவில் 1989-90 வரை இந்தியா உலக அளவில் 14-வது இடத்திலேயே இருந்தது. 1988-ல் விவி மினரல் இந்த தொழிலில் நுழைந்த பிறகு 1994-95-ல் இந்தியா உலக அளவில் 7-வது இடத்திற்கு முன்னேறியது. 1999 முதல் உலக கார்னட் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
இதனை கூறுவது இந்தியாவை அடிமை படுத்தி வைத்திருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து அகில உலக அளவில் கனிம உற்பத்தி விற்பனை ஆகியவற்றை ஆய்வு செய்து வெளியிடும் “ரோஸ்கில்” என்னும் அமைப்பு ஆகும்.
வி.வி.மினரல் நிறுவனம் கடந்த 23 ஆண்டுகளாக இந்திய அரசின் சிறந்த ஏற்றுமதியாளர் விருதை பெற்று வருவது அனைவருக்கும் தெரிந்ததே.
மேற்கு தொடர்ச்சி மலையில் பாறைகளில் கிடைக்கும் சில வகை அபூர்வ கனிமங்களான கார்னட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான் முதலியவை கால மாற்றத்தால் உடைந்து நொறுங்கி மணல் வடிவமாகி மலையில் இருந்து அடித்து வரப்படும் ஆறுகளால் கடலின் உள்ளே கொண்டு சேர்க்கப் படுகிறது. இவ்வாறு பலநூறு ஆண்டுகளாக கடலின் உள்ளே சேர்க்கப் பட்ட கனிமங்கள் கடல் மணலோடு சேர்ந்து கடற்கரையில் ஒதுக்கப் படுகிறது. இதற்கு கடலின் உள்ளே ஏற்படும் மின் மாற்றம், காற்றின் திசை, அலையின் அளவு முதலியவை காரணிகளாக அமைகின்றன. இவ்வாறு கடற்கரையில் உச்ச அலை காலத்தில் ஒதுக்கப் படும் கனிமங்கள் வெயிலில் உலர்ந்து அருகில் உள்ள பட்டா நிலங்களுக்கு காற்றால் அடித்து செல்லப் படுகிறது.
இவ்வாறு நிலப்பகுதிக்கு கொண்டு சேர்க்கப்படும் கனிமங்களை எடுப்பதற்கு மத்திய அரசின் முன் ஒப்புதலோடு கூடிய சுரங்க குத்தகையை மாநில அரசிடம் பெற்றுள்ளது. மேலும் சுரங்க திட்டத்தை இந்திய அரசிடம் அங்;கீகாரம் பெற்றுள்ளது. இந்திய அரசு சுற்றுச்சூழல் துறையில் இருந்து கடலோர மேலாண்மை விதிகளின் கீழ்; அனுமதி மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி முதலியவற்றை பெற்றுள்ளது.
வி.வி.மினரல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள 25 சுரங்க குத்தகைகளில் 3 தவிர இதர 22 சுரங்க குத்தகைகள் விவி மினரல் நிறுவனத்தின் சொந்த பட்டா நிலம்.
இவ்வாறு உரிய அனுமதிகள் பெற்று குவாரி செய்யப்படும் தாது கனிம மணலில் இருந்து அபூர்வ தாது கனிமங்கள் பிரித்து எடுக்கப் பட்டு கழிவு மணல்கள் குவாரி செய்யப் பட்ட இடத்திலேயே நிரப்பி சமன் செய்யப் படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு அல்லது மாசு அடைவதில்லை.
கடல் வேண்டாம் என்று வெளியே தள்ளும் தாது மணலை மட்டுமே எடுப்பதால் கடல் வளம் பாதிக்கப் படுவதில்லை. மேலும் இதை எலக்ட்ரோ மேக்னடிக் முறையில் தரம் பிரிப்பதால் இதற்கு ரசாயனமோ அல்லது அமிலங்களோ போன்ற எதுவும் உபயோகப் படுத்துவதில்லை.
உரிமம் வழங்கும் முன்பு உரிமம் கேட்கும் பகுதியை ஒட்டி மீனவர் குடியிருப்பு, விவசாய நிலங்கள், பழங்கால நினைவு சின்னங்கள் இல்லை என்பதை நேரில் ஆய்வு செய்து உறுதி செய்த பிறகே உரிமம் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் மொத்தம் 81 சுரங்க குத்தகைகள் வழங்கப் பட்டுள்ளதில் இந்திய அரசு நிறுவனத்திற்கு வழங்கப் பட்ட 4 சுரங்க குத்தகைகள் தவிர 77 சுரங்க குத்தகைகள் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப் பட்டுள்ளன.
கடந்த ஆண்டு தனியார் நிறுவனங்களில் 3 நிறுவனங்களுக்கு இந்திய அரசு பரிசு வழங்கியது. இந்த ஆண்டு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்தும் 3 நிறுவனங்களுக்கு சிறந்த ஏற்றுமதிக்கான விருது வழங்கப் பட்டது. அதில் விவி மினரல் நிறுவனமும் ஒன்று.
சுற்றுச்சூழல் பராமரிப்பதில் வி.வி.மினரல் நிறுவனத்தின் பங்கு
கடற்கரை அருகில் மணல் அள்ளி முடித்த இடங்களில் பசும் சோலையை உருவாக்கி உள்ளது. இந்திய அரசு சுரங்கத் துறை, இந்தியன் பீரோ ஆப் மைன்ஸ் சார்பில் வழங்கும் “சிறந்த சுற்றுச்சூழல் பராமரிப்பு சுரங்கம்” என்ற விருதை வி.வி.மினரல் கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து பெற்று வருகிறது. இந்தியாவில் 5-ல் ஒரு பங்கு இடத்தில் கடலரிப்பு உள்ளது. ஆனால் வி.வி.மினரல் கனிம மணல் அள்ளும் பகுதிகளில் கடலரிப்பும் கிடையாது. சுனாமியாலும் பாதிக்கப்படவில்லை. ஏனென்றால் கடலோர மேலாண்மை விதிமுறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படுகிறது.
சமூகப்பணியில் வி.வி.மினரல் நிறுவனத்தின் பங்கு
வி.வி.மினரல் ஒவ்வொரு வருடமும் சுமார் 15000 ஏழை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தங்களையும் மற்றும் மாணவர்களுக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கி மாணவர்களை கல்வி கற்க ஊக்கப்படுததி வருகிறது.
வி.வி.பொறியியல் கல்லூரியில் நன்கு படித்த மாணவர்களுக்கு கட்டண சலுகையும் வழங்கி மாணவர்கள் படிக்க ஊக்குவிக்கிறது. மின்வசதியில்லாத கிராமத்தில் மாணவர்கள் படிக்கும் வகையில் இலவசமாக சோலர் லேம்ப் வழங்கி வருகிறது.
இது தவிர கடற்கரையோரமாக உள்ள இரண்டு ஊராட்சிகளில் இலவசமாக நவீன கழிப்பிடம் கட்டி கொடுத்து கிராம சுகாதாரத்தை மேம்படுத்தி வருகிறது. கிராமப்புற மாணவர்களில் அதிகம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பல வருடங்களாக பரிசுகளை வழங்கி கல்வியில் மேலும் சிறந்து வழங்க ஊக்குவிக்கிறது இந்நிறுவனம். பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி வருகிறது.
மேலும் விவி மினரல் நிறுவனம் அமைத்துள்ள “கேரின்லி ஹெல்த் சென்டரில்” முழுநேர மருத்துவர் மற்றும் செவிலியர்களை நியமித்து அதன் பணியாளர் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அன்றி சுற்றுபுற கிராம ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ வசதியும் செய்து வருகிறது. ஆண்டுக்கு இருமுறை நெல்லையில் உள்ள “கேலக்ஸி” மருத்துவமனையோடு சேர்ந்து குத்தகை பகுதி அருகில் உள்ள கிராமங்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனையையும் செய்து வருகிறது.
தொழிலாளர்களின் குடும்பத்தினர் இலவச மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நாகர்கோவிலில் உள்ள புகழ் பெற்ற ஜெயசேகரன் மருத்துவமனை உட்பட திருநெல்வேலிஇ தூத்துக்குடிஇ சென்னை உட்பட மொத்தம் 14 மருத்துவமனைகளோடு ஏற்பாடுகள் செய்து தொழிலாளர்களின் குடும்பத்தினர் இலவச மருத்துவ சிகிச்சை பெற ஏற்பாடு செய்துள்ளது. தொழிலாளர்களுக்கு குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தில் பணம் செலுத்தி 3 வகையாக அதிக பட்சம் 4 லட்சம் ரூபாய் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கவும் வழிவகை செய்துள்ளது.
தாதுமணல்களின் உபயோகம்
மனிதன் கற்காலத்தில் இருந்து உலோக காலத்திற்கு மாறும் போதே கனிமங்களின் உபயோகம் நடைமுறைக்கு வந்து விட்டது. உலகத்தில் உணவு மற்றும் மரம் சார்ந்த பொருட்கள் தவிர அனைத்தும் கனிமங்களில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே நாகரீக உலகத்திற்கு கனிமம் இன்றி அமையாதது. பேப்பர்இ பிளாஸ்டிக்இ வீடுகளுக்கு பூசும் வர்ணம்இ பீங்கான் கோப்பை வீடுகளுக்கு பதிக்கும் நவீன ஓடுகள் மற்றும் விமானம்இ ராக்கெட் முதலியவற்றிற்கு உபயோகப் படுத்தும் பொருட்கள் முதலியவை இந்த கனிமங்களில் இருந்து தயாரிக்கப் படுகிறது.
பொருளாதார முன்னேற்றம்
புவி வெப்பமயமாதலாலும், பருவநிலை மாற்றத்தாலும், மழையின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் தென் மாவட்டங்கள் கடும் வறட்சியை சந்தித்து வந்துள்ளன. குறிப்பாக இராதாபுரம் தாலுகா ஒரு மழை மறைவு பிரதேசம். எனவே விவசாயம் இல்லை. பனை தொழில் இல்லை. பீடி சுற்றும் தொழிலும் தற்போது இல்லை. இப்பகுதி தொழில் துறையில் மிகவும் பின்தங்கிய பகுதி என மத்திய மாநில அரசுகளால் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதி ஆகும். இப்பகுதியில் தாது மணல் தொழில் ஏராளமான நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது.
மத்திய அரசுக்கு 10 சதவீத ஏற்றுமதி வரி, 12 சதவீத உற்பத்தி வரி, 14 சதவீத சேவை வரி மற்றும் மாநில அரசுக்கு 3 சதவீத ராயல்டி, 5 சதவீத விற்பனை வரி போக கொள்முதல் செய்யும் இனங்களுக்கும் சேவை வரி, வாட் முதலிய வரி இனங்களை செலுத்தி வருவதோடு பல ஆயிரகணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கி இந்தியாவின் அத்தியாவசிய தேவையான அன்னிய செலவாணியும் ஈட்டி தருகிறது. உலகிலேயே முன்னணி உற்பத்தியாளராக திகழும் இந்தியாவில் தமிழகம் தான் தாது மணல் தொழிலில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்பதும் அதற்கு வி.வி.மினரல் நிறுவனத்தின் பங்கும் உண்டு என்பதும் தமிழக மக்கள் அனைவருக்கும் பெருமை தானே.
நன்றி
தினத்தந்தி தொழில் மலர் 21.10.2015
One thought on “தாது மணல் உற்பத்தியில் இந்தியாவை உலகின் நம்பர் 1 நாடாக மாற்றிய தமிழ்நாட்டின் விவி மினரல்”
Leave a Reply
Don't Miss on our latest updates
SIGN UP TODAY
[contact-form-7 id="170" title="Subscribe"]
அருமையான பதிவு . ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் வெளி நாட்டினரும் தெரிய வாய்ப்பாகும்.