ஜீனியர் விகடன் பத்திரிக்கை செய்திக்கு மறுப்பு

Beach Minerals

Jul 29 2015

                                                                                                    நாள் : 29.07.2015
பெறுநர்
உயர்திரு. ஆசிரியர் அவர்கள்,
ஜீனியர் விகடன்,
சென்னை.
அன்புடையீர்,
தங்களது 2.8.2015 தேதிய வெளியீட்டில் “20 வருடங்களில் 10 லட்சம் கோடி பறிபோய் இருக்கும் கார்னட் கணக்கு” என்று திரு.முகிலன் என்பவர் படத்தோடு வெளியான செய்திக்கு இந்த மறுப்பை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் வழங்கப்பட்ட சுரங்க குத்தகைகளில் இந்திய அரசு நிறுவனமான இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சுரங்க குத்தகைகள் மட்டுமே மீனவர் குடியிருப்பு பகுதிகளில் வழங்கப் பட்டுள்ளன. அவர்கள் தான் சுற்றுச்சூழல் அனுமதி இன்றியும் கடலோர மேலாண்மை விதி பாதுகாப்பு அனுமதி இன்றியும் சுரங்க குத்தகைகளை இயக்கி வருகிறார்கள். தனியார் நிறுவனத்திற்கு வழங்கப் பட்ட சுரங்க குத்தகைளில் திரு.தயாதேவதாஸ்க்கு வழங்கப் பட்ட 8 சுரங்க குத்தகைகளும், இதர நிறுவனங்களுக்கு வழங்கப் பட்ட 6 சுரங்க குத்தகைகளும் மட்டுமே அரசு நிலத்தில் வழங்கப் பட்டவை ஆகும். இதர அனைத்து சுரங்க குத்தகைகளும் அவர்களது சொந்த பட்டா நிலங்களில் வழங்கப் பட்டவை. மேலும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள அளவுகள், தொகைகள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை.
ஒரு ஏக்கர் நிலத்தை 16 பைசா குத்தகைக்கு என அரசு சுரங்க குத்தகை வழங்கவில்லை. அவ்வாறு வழங்க இயலாது. அதே போல் சட்டமன்றத்தில் அமைச்சர் கூறியதில் தவறு இல்லை. சில ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் திரு.தயாதேவதாஸ் என்பவரிடம் பணியாற்றி அவருக்கு உதவி செய்வதற்காக சட்டத்திற்கு புறம்பாக தற்காலிக தடை என விதிக்க ஆவண செய்தார்கள். இதற்கென பத்திரிக்கைகள், தொலைகாட்சிகளில் தவறான செய்திகள் பரப்பப் பட்டன. இந்த தற்காலிக தடை சம்பந்தமாக ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டு மேண்மை தங்கிய சென்னை உயர்நீதிமன்றமும் மேற்கண்ட தடை சட்டத்திற்கு புறம்பானது என அறிவித்து அதனை நீக்கரவு செய்து ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த தொழிலில் யாரையும் மிரட்டமுடியாது. ஏனென்றால் இதில் டெண்டர் சிஸ்டம் என்பது பொறுந்தாது. சொந்த பட்டா நிலத்தில் உள்ள கனிமங்கள் நில உரிமையாளருக்கே சொந்தம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் கூட பட்டா நிலத்திலும் அரசின் உரிமம் பெற்று சுற்றுச்சூழல் அனுமதி பெற்று சட்ட விதிகளுக்கு உட்பட்டே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுரங்க குத்தகைகளும் இயங்கி வருகின்றன.
தவறு செய்யும் நிறுவனங்கள் மீது அரசு தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு சட்டபுறம்பாக சுரங்க பணி செய்த ஒரு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு சுமார் 2¾ லட்சம் டன்னுக்கு மட்டும் அரசுக்கு பணம் செலுத்தி விட்டு சுமார் 39 லட்சம் டன் சட்ட புறம்பாக குவாரி செய்தது கண்டு பிடிக்கப்பட்டு அரசு மேல் நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து திரு. தயாதேவதாஸ் என்னும் அந்த நபர் தாக்கல் செய்த ரிட் மனு, சீராய்வு மனு மற்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிறப்பு அனுமதி மனு ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளன.
ஏற்றுமதி இறக்குமதி என்பது அனைத்தும் ஆவணங்களின் அடிப்படையில் செய்யப் படுவது. தற்போது உலகம் முழுமையும் இவற்றின் விலை விபரங்கள் ஒப்பீடு செய்யப் படும். இதற்கென ITC HS    என ஒரு வழிவகை உள்ளது.
இந்த கட்டுரையில் வெளியிடப் பட்டுள்ள முகிலன் என்பவரும் மேற்கண்ட தயாதேவதாஸ் என்பவரின் சம்பள பட்டியலில் உள்ள நபர் தான். இதற்கான வீடியோ ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன.
திரு. சுந்தரம் ஐஏஎஸ் என்பவர் 96,100 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக ஒரு புகாரை கூறி இருந்தார். மத்திய மாநில அரசு அதிகாரிகள் கூட்டு ஆய்வு மேற்கொண்டு ஆவணங்களை பரிசீலித்து இவை அனைத்தும் உண்மை அல்ல என்பதை அறிக்கை செய்துள்ளார்கள். மேற்கண்ட அறிக்கை நகலும் எங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே தாங்கள் வெளியிட்டுள்ள செய்தி தவறான தகவல்களின் அடிப்படையில் வெளியிடப் பட்டுள்ளது. எனவே எங்களது இந்த மறுப்பை தங்கள் பத்திரிக்கையில் வெளியிட கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
நா.பால்துரை என்ற பெருமாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss on our latest updates

SIGN UP TODAY

[contact-form-7 id="170" title="Subscribe"]