
இந்திய போட்டியை சமாளிக்க முடியாமல் உலகில் No.1 இலுக்கா மைன்ஸ் அதன் சுரங்கத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது
Beach Minerals
May 07 2015
உலகிலேயே பெரிய தாதுமணல் நிறுவனம் இலுக்கா மைன்ஸ் விலை குறைவு மற்றும் நஷ்டத்தினால் அதற்கு மொசாம்பிக் நாட்டில் உள்ள சுரங்கத்தை விற்பதற்கு முடிவு செய்துள்ளது. இலுக்கா மைன்ஸ் என்பது உலகில் உள்ள மிகப் பெரிய தாதுமணல் நிறுவனங்களில் ஒன்று. இதற்கு பல்வேறு நாடுகளிலும் சுரங்கங்கள் உள்ளன. சிர்கான் உற்பத்தில் உலகில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் சமீப காலமாக ஏற்பட்ட விலைகுறைவு போன்ற இதர காரணங்களால் அந்நிறுவனம் மொசாம்பிக் நாட்டில் சுமார் 22500 கோடி ரூபாய் செலவில் அமைத்துள்ள சுரங்கம், தொழிற்சாலை, தளவாடங்கள் அனைத்தையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. 22500 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட தொழிற்சாலை, சுரங்கம் அத்தனையையும் 2500 கோடி ரூபாய்க்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு விற்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால் விற்பனை இன்னும் முடிவாகவில்லை. ஆஸ்திரேலியா நிறுவனம் அதிலும் விலை குறைத்து கேட்கிறது.
உலகில் ஏகபோகமாக இந்த தொழிலில் இருந்த நிறுவனங்கள் எல்லாம் இந்தியாவில் தாதுமணல் வளர்ச்சியால் தொடர்ந்து நஷ்டம் கண்டு வந்தன. இவைகள் எல்லாம் பெரும் தொகையை செலவு செய்து தாது மணலுக்கு எதிராக இந்தியாவில் திட்டமிட்ட பிரச்சாரத்தையும், பொய் புகார்களையும், பொய் வழக்குகளையும் உண்டாக்கி வருகின்றன. இவற்றின் பின்னணியில் வெளிநாட்டு நிறுவனங்களின் சதி உண்டு என இந்திய தாது மணல் உற்பத்தியாளர் சங்கம் கடந்த நான்கு வருடங்களாக கூறி வரும் புகார் உண்மை தான் என்பது ஊர்ஜிதமாகிறது.
Don't Miss on our latest updates
SIGN UP TODAY
[contact-form-7 id="170" title="Subscribe"]