
அகில இந்திய அளவில் இல்மனைட் ஏற்றுமதி 36 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.
Beach Minerals
Sep 15 2016
இந்திய அரசு வணிகத்துறையின் சார்பில் ஏற்றுமதியை ஊக்குவிக்க CAPEXIL என்ற அமைப்பு உள்ளது. அதில் கனிம பிரிவிற்கு தலைவராக இந்திய அரசு இந்தியன் ரேர் எர்த் நிறுவன நிர்வாக இயக்குனர் உள்ளார். கடந்த ஆண்டு கனிம ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளதால் இது பற்றி விளக்கம் கேட்டு இந்திய அரசு CAPEXIL –க்கு கடிதம் எழுதியது. எனவே இது பற்றி ஒரு கூட்டம் டெல்லியில் கடந்த 10.08.2016 தேதியில் நடந்தது. அந்த கூட்டத்தின் Minutes வெளியிடப்பட்டுள்ளது.
அதில் இல்மனைட் ஏற்றுமதி 36% குறைந்துள்ளதும் வழக்கமாக 20% வளர்ச்சி காணும் கார்னட் ஏற்றுமதி வெறும் 4% மட்டுமே வளர்ச்சி கண்டதும் தெரிய வருகிறது.
இந்த ஏற்றுமதி குறைவு இந்திய அரசுக்கு மட்டும் இழப்பு அல்ல. தொழிலாளர்களுக்கும், மாநில அரசுக்கும் கூட ஒரு பெரிய இழப்பாகவே அமையும்.
Don't Miss on our latest updates
SIGN UP TODAY
[contact-form-7 id="170" title="Subscribe"]